June 10, 2023 10:36 pm
adcode

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அபாயம்!!

எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்குமாறு நிரப்பு நிலையங்கள் பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

எரிபொருள் எடுக்க வரும் மக்கள் கலவரமாக நடந்து கொள்வதால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேவையான எரிபொருள் கிடைக்கும் வரை எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அனுமதி கோரியுள்ளனர்.

Share

Related News