எல்.பி. எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை உருவாக்குவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, எல். பி. எரிவாயு இறக்குமதிகள், எரிவாயு சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் மற்றும் வால்வுகள் போன்றவற்றின் இறக்குமதி மற்றும் விநியோகத் தரங்களை அமைக்கவும் ஒழுங்குபடுத்தவும் தர நிர்ணய நிறுவனம் அதிகாரம் கொண்டுள்ளது.