March 31, 2023 11:53 pm
adcode

எரிவாயு சரியான தரத்தில் இல்லை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த எரிவாயுக் கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதிலுள்ள வாயுவை சம்பந்தப்பட்ட பிரிவினர் பரிசோதித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (14) இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தொழிநுட்ப குழு கூட்டத்தில் குறித்த கப்பலில் இருந்த எரிவாயு சரியான தரத்தில் இல்லை என தெரியவந்துள்ளது.

Share

Related News