ஆதாரமற்ற விடயங்களில் ஏமாந்துவிடாமல் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமும் இன்றி அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.