ஐரோப்பாவிலும் – ஆசியாவிலும் கடந்த சில நாட்களில் ‘பறவைக் காய்ச்சல்’ விரைவாகப் பரவி வருவதாக உலக விலங்கு நல நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் சுமார் 7 இலட்சத்து 70 ஆயிரம் பறவைகள் உள்ள பண்ணையொன்றில் கடந்த திங்கட்கிழமை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த சகல பறவைகளும் அழிக்கப்பட்டன. ஜப்பான், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டிருப்பதாக உலக விலங்கு நல நிறுவனம் தெரிவித்திருக்கிறது.