ஐரோப்பாவில் காஸின் விலை நேற்று (20)மேலும் 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி வீட்டுப் பாவனைக்கான ஆயிரம் கனமீற்றர் காஸின் விலை நேற்று ஆயிரத்து 732 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஐரோப்பாவில் காஸின் விலை 2 ஆயிரம் டொலர்களை அண்மித்திருந்தது. இந்த வருடத்தில் ஆரம்பத்துடன் ஒப்பிடும் போது 400 சதவீதத்தால் காஸின் விலை உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய வலயத்தில் எரிசக்தியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.