பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரோன் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு இன்று(29) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.