சீனாவில் ஒரு மாதத்தில் 60,000 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை இடைநிறுத்த நாட்டின் அதிகாரிகள் முடிவு செய்த பிறகு இதுபோன்ற தகவல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.