June 11, 2023 12:25 am
adcode

ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியில் இருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News