September 26, 2023 9:46 pm
adcode

ஓய்வூதியம் பெறுவோருக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு.

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்குமான ஐந்து ஆயிரம் ரூபா (5000) விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஓய்வூதிய திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரினதும் ஓய்வூதிய பற்றுச்சீட்டில் தற்போது இதனை பார்வையிட முடியும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.

புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.

இந்த கொடுப்பனவின் மூலம் சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் நன்மை அடைவர் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் மேலும் தெரிவித்தார்.

Share

Related News