கடந்த வாரத்தில் 925 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 220 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 96 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 70 நோயாளர்களும் காலி மாவட்டத்தில் 62 நோயாளர்களும் இவ்வாறு காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக இந்த வருடத்தில் கடந்த 5 வார காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 15 என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.