September 30, 2023 8:25 am
adcode

கனடாவில் கட்டாய தடுப்பூசி; எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்.

கனடாவின் ஒட்டாவா நகர முதல்வர் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளார்.

ட்ரக் வண்டி உரிமையாளர்களின் 10 நாள் ஆர்ப்பாட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ட்ரக் வண்டி ஓட்டுனர்கள் தலைநகரின் பல மையப் பகுதிகளை முடக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மக்களின் இந்த போராட்டம் “உண்மைக்கு ஒரு அவமானம்” என கூறி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கட்டாய தடுப்பூசி முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒட்டாவா நகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இதனால் தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இது நகரவாசிகளின் பாதுகாப்பிற்கு கடும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருப்பதாக நகர முதல்வர் வட்சன் தெரிவித்துள்ளார்.

Share

Related News