முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சிரிலங்காபிமானி -இலங்கையின் பெருமை என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஜயசூரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இந்த கௌரவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசத்துக்காக அவர் ஆற்றிய சிறப்பான சேவையின் காரணமாக இந்த விருதை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பீமானி விருது என்பது இலங்கையின் பொதுமகனுக்கான உயரிய கௌரவமாகும்.