October 2, 2023 11:59 pm
adcode

புத்தளம் பிரதேச பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பின் குறித்த மாணவர்களுக்கான அறிவிப்பு.

அடை மழை காரணமாக என்றுமில்லாதவாறு புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கிய மை மற்றும்  குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய சேதத்தினால்  பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வெள்ளத்தினால் மூழ்கி பழுதடைந்திருந்தால் அதுதொடர்பில் உரிய மாணவர்கள் தமது பெயர்களை தங்களது கிராம உத்தியோகத்தரிடம் வழங்குமாறு புத்தளம் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதணிகள், ஆடைகள் மற்றும் புத்தகப் பை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் என்பன வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் அல்லது நீரில் மூழ்கி பழுதடைந்திருந்தால் அம்மாணவர்கள் தமது பெயர் விபரங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்துமாறும் புத்தளம் பிரதேச செயலகம் கேட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:

பிரதேச செயலாளர – 0768 507 508 

உதவி பிரதேச செயலாளர – 0713 913 451 

நிர்வாக கிராம உத்தியோகத்தர் – 0775 162 027 

Share

Related News