September 28, 2023 3:36 am
adcode

கலஹா தெல்தோட்டை அவசரகால நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலஹா தெல்தோட்டை அவசரகால நலன்புரி அமைப்பினால் எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை கொரோனா தொற்றுலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

 

இதன் ஒர் அங்கமாகவே தெல்தோட்டை வைத்தியசாலை மற்றும் பள்ளேகம் வைத்தியசாலைக்கான ஒக்சிசன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

 

மேலும், எமது பிரததேசத்தில் கிராமவாரியாக உருவாக்கப்பட்ட கிராமிய கண்காணிப்பு குழுக்களுக்கான ஒக்சி மீட்டர், மாஸ்க், பாதுகாப்பு ஆடைகள் (PPE Kit) மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறிப்பிட்ட இந்நிகழ்வு கடந்த 15ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2021 நடைபெற்றது.

 

இந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை வழங்குவதற்கு உதவி புரிந்த ஸ்ரீலங்கா பிரதர்ஸ் அமைப்பு, தெல்தோட்டை கட்டரியன்ஸ் மற்றும் அல்ஹாஜ் ஜமீல் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

16.09.2021

படங்கள்

Share

Related News