நேற்று (24) திறந்து வைக்கப்பட்ட புதிய களனி பாலத்தின் (கல்யாணி தங்க வாயிலினூடாக) ஊடாக இன்று பிற்பகல் 3 மணி முதல் பொதுமக்கள் வாகனங்களை செலுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதற்தடவையாக அதிநவீன தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாலமான புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபகஷ ஆகியோரின் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த பாலத்திற்கு ‘கல்யாணி தங்க நுழைவு’ என பெயரிடப்பட்டுள்ளது.