கல்வியியல் கல்லூரிகளில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு Antigen பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகள் மேலும் பெற்றார் வேண்டுகோள் விடுப்பின் வீடு செல்ல அனுமதித்தல் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்
இதேவேளை ஒவ்வோரு கல்லூரியும் இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானமெடுக்க முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போதைய கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே ஆசிரிய ஆசிரிய மாணவர்களின் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய கல்லூரியிலிருந்து வெளியேறலாம் என அவர் தெரிவித்தார்.