கிண்ணிய நகரசபை மற்றும் பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாண பணிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு இன்று நீரில் மூழ்கியுள்ளது.
இன்று (23) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பயணம் செய்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் சடங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் பொலிசார் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.