கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவிக்கையில், ‘வருமானம் குறைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.
கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவது தற்போதைக்கு பிரதான விடயம் அல்ல.
எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட, யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பிரிட்டிஷ் ஆராய்ச்சியின் படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 32-மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளள்ளமை குறிப்பிடத்தக்கது.