September 26, 2023 9:24 pm
adcode

கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி சிறந்தது.

தற்போது எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு உணவு வகைகள் அதிகளவில் உணவில் சேர்க்கப்படுவதால், நாம் உண்ணும் மற்ற உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எண்ணெய் உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி செய்வது சிறந்தது என போஷாக்கு மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாழ்க்கையில் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மத்தியில், சரியான போஷாக்கு மிகுந்து உணவுவகைகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறினார்.

Share

Related News