இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் 71.0 ஆக பதிவாகியுள்ள மன்னார் மாவட்டத்திற்கு ஊதா நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது. இதேவேளை, பத்தரமுல்லை,கொழும்பு (72), மன்னார், வவுனியா, தம்புள்ளை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ பிரிவின் கீழ் வருவதாகவும், சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென NBRO தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புத்தளம், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. எவ்வாறாயினும், களுத்துறை, எம்பிலிப்பிட்டி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் காற்றின் தரம் நல்ல மட்டத்தில் பதிவாகியுள்ளது.