September 26, 2023 8:37 pm
adcode

க.பொ.த சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு.

க.பொ.த சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் 2021 க.பொ.தபோலீஸ் சாதாரண தர பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது பரீட்சை நிலையங்களை ஒருங்கிணைப்பு செய்வதற்காக 542 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதற்கமைவாக ஒவ்வொரு பரீட்சை நிலையங்களிலும் ஒரு பொலிஸ் சார்ஜண்ட் . மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பரீட்சார்த்திகளுக்கான வினாபத்திரங்கள் மற்றும் விடைத்தாள்கள் எடுத்துச்செல்லும் போது நடமாடும் பொலிஸ் ரோந்து பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

Share

Related News