June 10, 2023 11:17 pm
adcode

சகல பிரதேச அலுவலகங்களும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்!! – தொழில் ஆணையாளர் நாயகம்

தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் சகல பிரதேச அலுவலகங்களும் இந்த மாதம் 3ம் திகதியிலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் டி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அரச செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச நிறுவனங்களின் பணிக்குழாத்தை வரையறுக்கும்; வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் சேவை பெறுவதற்காக வெள்ளிக்கிழமைகளில் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கோ, பிரதேச அலுவலகங்களுக்கோ வருகை தர வேண்டாமென தொழில் ஆணையாளர் நாயகம் டி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Related News