September 28, 2023 3:13 am
adcode

சதொச நிவாரண பொதியில் மாற்றம்.

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நேற்று (27) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான சந்தர்பபம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சதொச நிவாரணப் பொதிக்கு சீனியை கொள்வனவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு கிலோகிராம் அரிசி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,998 நிவாரணப் பொதிக்கு 10 கிலோ கிராம் சம்பா அரிசி வழங்கப்படுகின்றது. அந்த நிவாரணப் பொதியைத் தயாரிக்கும்போது, 2 கிலோ கிராம் உளநாட்டு சிவப்பு சீனியும் வழங்குகின்றோம். சில சதொச விற்பனை நிலையங்களில்  சிவப்பு சீனி போதிய கையிருப்பு இல்லாத நிலையில், அதற்கு பதிலாக என்ன கொள்வனவு செய்வது என்ற கேள்வி எழுந்தது. எனவே நேற்று (27) முதல் டிசம்பர் 31ம் திகதி வரை நிவாரண பொதிக்கு சிவப்பு சீனியை கொள்வனவு செய்ய முடியாதவர்கள் அதற்கு பதிலாக மேலதிகமாக 2 கிலோ கிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.’ ஏன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று (27) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச விற்பனை நிலையங்களில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட 5 கிலோ கிராம் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும். அதன்படி புத்தாண்டுக்காக சதொச நிறுவனத்திடமிருந்து 10 கிலோ சுப்பர் சம்பாவை 130 ரூபா விலையில் பெற்றுக்கொள்ள முடியும். சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே வழங்கப்படும்.’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 AKM / Mohamed Faizul –

Share

Related News