March 23, 2023 4:37 pm
adcode

சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது.

இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவினால் குறைத்திருந்தது.

சந்தையில் இவற்றுக்கு இருந்த விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News