March 28, 2023 1:58 pm
adcode

சமீபத்தில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடித்த சம்பவம் இரசாயணவியல் மாற்றத்தினால் ஏற்பட்டதா? உண்மை என்ன?

சமீபத்தில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடித்த சம்பவம் இரசாயணவியல் மாற்றத்தினால் ஏற்பட்டதாகும் என்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று (2021.11.25) டெலி மிரர் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு 07, மெக்டோனல்டஸ் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் 2021. 11. 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் , குறித்த உணவகத்தில் திரவ பெட்ரோலிய வாயு கசிவு ஏற்பட்டதுடன் அந்த சந்தர்ப்பத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த மின் உபகரணத்த்தில் வெளியான மின்சார தீப்பொரி காற்றுடன் கலந்ததினால் ஏற்பட்ட நிலையே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Related News