இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் திணைக்களத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கொழும்பில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவர் எனவும் வாகன ஓவியம் வரைபவராக கடமையாற்றியவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.