September 28, 2023 4:12 am
adcode

சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பு?

டிசம்பர் மாதம் 04 திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஆலோசனை வழங்கியுள்ளது.
இருப்பினும், இவ்வாறு பெறப்படுபவை பயன்படுத்தப்படாத பொலித்தினால் உள்ளடக்கப்பட்ட சீல் உடனான கேஸ் சிலிண்டர் மாத்திரமே ஆகும் என்று  நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை லிட்ரே நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களை கொள்வனவு பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு செய்யும் போது நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு பற்றுச்சீட்டை வழங்காத வர்த்தக நிலையம் தொடர்பாக நுகர்வோர் முறைப்பாடு செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற எரிவாயு அனர்த்தம் தொடர்பான முறைப்பாட்டில் சுமார் 53 சதவீதத்திற்கு மேற்பட்டவை எரிவாயு கசிவு தொடர்பானதாகுமென்று, எரிவாயு அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தெரிவித்துள்ளது.

Share

Related News