March 23, 2023 4:44 pm
adcode

சமையல் எரிவாயு நெருக்கடி நிலைக்கு காரணம் என்ன?

லிற்றோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததினாலேயே நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு சந்தையில் வர்த்தக மோசடிக் குழுவொன்றின் செயற்பாடே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு இறக்குமதியின் ஏகபோக உரிமையை ஒரு குழு மாத்திரமே வைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வேறு தரப்புகளுக்கு gas இறக்குமதியை மேற்கொள்ள இடமளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Related News