March 26, 2023 5:36 am
adcode

சிவனொளிபாத மலை யாத்திரை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை.

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

 

சிவனொளிபாத மலை யாத்திரை சுகாதார பிரவினர்களின் ஆலோசனைக்கமைய ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு பிரிவு குழு கூட்டம் 7 ஆம் திகதி நடைபெற்ற போதே
ஆளுநர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 43,981 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

கடந்த நவம்பர் மாதம் மட்டும்  3,989 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Share

Related News