இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு சீனாவின் ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக டெய்லி மிரர் நாளிதழ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்கவுள்ளதுடன், அந்த கடன் தொகையை அங்கீகரிக்க சீனாவும் இந்தியாவும் இலங்கையின் கடனை மறுசீரமைக்க இணங்குவது இன்றியமையாததாக இருந்தது.
இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக இந்தியாவும் சீனாவும் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கோரும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு சீனாவின் ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு பத்து வருட கால அவகாசம் வழங்க பரிஸ் கிளப் எனப்படும் நாடுகளின் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.