September 26, 2023 8:26 pm
adcode

சீமெந்து தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு?

அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள் சீமெந்து 3 வார காலப் பகுதிக்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கட்டடப் பொருள் மற்றும் தொழில் துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபயசிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீமெந்து மற்றும் ‘தரையோடு’ இறக்குமதிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

சீமெந்தின் விலையேற்றம் மற்றும் தரையோடுகளுக்கான தட்டுப்பாட்டினால் மக்கள் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Related News