September 28, 2023 3:40 am
adcode

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழப்பு…

சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 25 பேர் மரணித்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 76 மத்திய நிலையங்களில் 12 ஆயிரத்து 470 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மரம் ஒன்று முறிந்து விழுந்ததனால் ரம்புக்கணை வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பு, குருநாகல் வீதியின் கொட்டதெனிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது.    

நீர்கொழும்பு, கிரியுல்ல வீதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் குறித்த வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. களுத்துறை மாவட்டத்தின் மோல்காவஇ புளத்சிங்கள வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.

Share

Related News