75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேவையான செலவுகளை மதிப்பீடு செய்து உண்மையில் செலவிடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அதற்கேற்ப செலவுகளை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலதா மாளிகையில் விசேட பூஜை மற்றும் பிரித் சொற்பொழிவு, சர்வமத விழாக்கள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, பாரம்பரிய சுதந்திரக் கொண்டாட்டங்கள் என்பன அவற்றில் முக்கிய நிகழ்வுகளாகும்.