முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.
சமகி ஜன பலவேகய உறுப்பினர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.