பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி ‘GoHomeGota’ கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.