தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.