September 30, 2023 8:20 am
adcode

“டோரா ” சிங்க குட்டியை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி.

“டோரா “என்ற சிங்க குட்டி செவ்வாய் (18) தொடக்கம் பொது மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதாக ரிதியகம மிருகக்காட்சிசாலைக்கு பொறுப்பான அதிகாரி ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்த சிங்க குட்டிக்கு 4 1/2 மாதம் நிறைவடைந்துள்ளது. பொது மக்களின் காட்சிக்காக இதனை ஏனைய மிருகங்களுடன் வைக்கும் அளவுக்கு இது தகுதி பெறவில்லை. இதனால் இது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ரிதியகம சபாரி மிருகக்காட்சிசாலையில் லாரா என்ற சிங்கத்திற்கே இந்த டோரா சிங்க குட்டி பிறந்துள்ளது.

இந்த மிருகக்காட்சிசாலையில் தற்பொழுது 15 சிங்கங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News