கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடாக தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டமைக்கான செயலி (APP) ஒன்றை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த செயலி இல்லாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
– Ada derana