June 10, 2023 11:59 pm
adcode

தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

தற்போதுள்ள தடுப்பூசி கொள்கை நியாயமற்றது, தன்னிச்சையானது என்று சொல்ல முடியாது என்பது திருப்தியாக உள்ளது என்றும் பொதுமக்களின் நலனுக்காக அரசு கொள்கை வகுக்கலாம், நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், பொது இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செல்ல கட்டுப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளை சில மாநில அரசுகள் விதித்துள்ளது சரியல்ல என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Share

Related News