நாடளாவிய ரீதியில் நாளை(06) முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை தபாலின்அனைத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவளிப்பார்கள் என்று தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(05) நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் சேவை தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.