தமிழ்நாட்டில் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று இணைந்து 3வது அலை பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாடு மரீனா கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிக்கையில், நாளை முதல் 15 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவிருப்பதாகக் கூறினார்.
ஜனவரி 10 முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.