தமிழகத்தில் Covid-19 வைரசு நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பாடசாலைகள், கல்லூரிகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ,கொரோனா நோய் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
மாநில தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த 27 ஆம் திகதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பாடசாலைகள், கல்லூரிகளை திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது.
நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பாடசாலைகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.