நேற்று (27) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டத்தின் போதே இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பல்வேறு வகையான உரங்களை மிகக்கூடிய விலைகளில் பெற்று பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விவசாய திணைக்களத்தின் ஊடாகவும் விவசாயிகளுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலும் சட்ட ரீதியற்ற பயிர் செய்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.