நாட்டிற்கு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.
இவ்வாறான கூற்றுக்கள் மூலம் நிறுவனத்திற்கு சர்வதேச ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தரங்குறைந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால நாட்டில் செலுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
எரிபொருள் தரம் தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களின் கீழ் எரிபொருளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் களஞ்சியசாலையில் வைக்கப்படுவதற்கு முன்னர் தாங்கிகளில் அதற்கு முன்னர் உள்ள எரிபொருள் பரிசோதிக்கப்படும். எரிபொருளை பரிசோதனை செய்வதற்கு தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கப்பல்களுக்கு நாட்டிலிருந்து எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. இதேபோன்று விமானங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இலங்கை எரிபொருள் களஞ்சிய நிறுவனத்திற்கு சர்வதேச ரீதியில் நற்பெயர் உண்டு. இதனால் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.