நேற்று முன்தினம்(22) நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
கல்கமுவ ,பதுளை , காலி-நாகொட உள்ளிட்ட பகுதிகளில் சில பாடசாலைகள் சிலவற்றில் இவ்வாறான முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.