October 2, 2023 11:44 pm
adcode

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை: 18ம் திகதி நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்ட விடயங்கள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள்இ செயலமர்வுகளுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவிலிருந்து பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 5ம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த தடை விதி முறைகளை மீறி எவரேனும் செயற்படுவாராயின் அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோஇ பொலிஸ் தலைமையகத்திற்கோஇ பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Related News