September 30, 2023 9:17 am
adcode

தற்போது நிலவுகின்ற டீசல் தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்?

டீசலுடனான கப்பல் ஒன்று நேற்று (02.03.2022) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது.

இதற்கு செலுத்த வேண்டிய டொலர்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றுமொரு டீசல் கப்பலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த டீசல் கப்பல்கள் கிடைத்தவுடன், தற்போது நிலவுகின்ற டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Related News