திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க இலங்கையில் உள்ள சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
Short Eats (ரோல்ஸ், பெடிஸ் போன்றவை) விலை ரூ. 5 ஆலும் பரோட்டா, முட்டை பரோட்டா விலை ரூ.5 ஆலும் உயர்த்தப்படும். கொத்து ரொட்டி ஒன்றின் விலை 10/= ரூபாவால் அதிகரிக்கப்படும்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், மற்ற அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்