பாராளுமன்றத்தை அண்மித்த தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
படகு விபத்துக்குள்ளான போது அதில் மேலும் 3 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டதாகவும் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அதிகாலை திவவன்னா ஓயாவுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.